Thursday, March 19, 2015

புதுச்சேரியில் ‘ஆம்லா ஆபரேஷன்’ தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

image
புதுச்சேரி, மார்ச் 18: புதுச்சேரியில் ‘ஆம்லா ஆபரேஷன்’ தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவதைத் தடுப்பதற்காக 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆபரேஷன் ஆம்லா நடத்தப்பட்டு வருகிறது . இதுவரை 6 முறை நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினரின்  ஆம்லா ஆப்ரேஷன்  ஒத்திகையில் தீவிரவாதிகள் போன்று மாறு வேடத்தில், கடல் வழியாகவோ அல்லது சாலை வழியாகவோ ஊடுருவி வரும் கடலோர காவல் படை கமாண்டோக்கள், ஊருக்குள் எதாவது ஒரு பகுதிக்குள் ஊடுருவார்கள். இதனைக் கண்டுபிடித்து கடற்கரையோரப் பாதுகாப்பில் இருக்கும் காவல்துறையினர் அவர்களை  பிடிப்பார்கள். இதுவே ஆம்லா ஆப்ரேஷன் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆம்லா ஆபரேசன் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 6 மணிக்கு  தொடங்கி 36 மணிநேரம் நடைபெறுகிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு படை புதுச்சேரி போலீசார் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை செய்வார்கள்.
புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் போலீசார் கடல் வழியாக யாராவது ஊடுருவுகின்றனரா என்று பைனாகுளர் மற்றும் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment